திருமாவளவன் நெருங்கி வருகிறார்- அமைச்சர் ஜெயக்குமார் ஹேப்பி!
Recommended Video

சென்னை: திருமாவளவன் நெருங்கி வருகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் வரும் 30-ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் திருமாவளவன், நல்லக்கண்ணு உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில் எம்ஜிஆர் விழாவில் கலந்து கொள்ள எங்களுக்கு அழைப்பு வரவில்லை. வந்தால் கலந்து கொள்வேன் என்றார்.
இந்நிலையில் சென்னை தங்கச்சாலை மணிக்கூண்டு அருகே முன்னாள் மேயர் சிவராஜூக்கு 127-ஆவது பிறந்தநாள் விழாவில் அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அப்போது ஜெயக்குமார் செய்தியாளர்களிடையே கூறுகையில் எம்ஜிஆர் விழாவில் அழைத்தால் பங்கேற்பேன் என தெரிவித்த திருமாவளவனுக்கு பாராட்டுகள். அவர் நெருங்கி வந்துவிட்டார்.
அரசு விழா என்பதால் அனைத்து கட்சியினரையும் அழைக்கவில்லை. சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 7 லட்சம் பேர் பங்கேற்பர்.
[ ஒரு தாயின் ஆசை.. 132 அடி அந்தரத்தில் தொங்கிய 5 வயது மகன் ]
அனுமதி பெறாமல் எம்ஜிஆர் பேனர் வைக்கப்படுவதாக கூறுவது தவறு. அனுமதி பெற்றே பேனர்களை வைத்துள்ளோம். அப்படி ஏதாவது அனுமதி பெறாமல் இருந்தால் நீங்களே சுட்டிக் காட்டுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications