காந்தியின் கனவை நிறைவேற்றும் ஒரே மாநிலம் தமிழகம்தான்- அமைச்சர் ஜெயக்குமார்
கா்நதியின் கனவை நிறைவேற்றும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: காந்தியின் கனவை நிறைவேற்றும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் பாதுகாப்பு அம்சம் குறித்து கூறியுள்ளார்.
தமிழகம் அமைதி பூங்காவாக காட்சியளிப்பதாக அவ்வப்போது அதிமுகவினர் கூறிக் கொள்கின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினரோ சமீபத்தில் 75 ரவுடிகள் ஒரே இடத்தில் கைது செய்ததை நினைவுகூர்ந்து பேசி வருகின்றனர்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று பெரும்பாலானோர் கூறி வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் நடுராத்திரியில் நகைகளுடன் பெண்கள் நடமாட வேண்டும் என்கிற காந்தி கனவை நிறைவேற்றும் அளவில் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு என்றார்.
இந்தியாவில் எப்போது பெண்கள் கழுத்து நிறைய நகைகளை அணிந்து கொண்டு நடுஇரவில் வெளியே சென்றுவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்புகின்றனரோ அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் என்று காந்தியடிகள் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications