மனசாட்சி இல்லாத மிருகங்களே ஜெ. சிலையை விமர்சிக்கும்.. கொந்தளிக்கும் ஜெயக்குமார்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலையை வளர்மதி போன்றோருடன் ஒப்பிடுவதா என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலையை வளர்மதி போன்றோருடன் ஒப்பிடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கொந்தளித்துள்ளார்.
மறைந்த முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டது. இன்று காலையில் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்ட சிலை, சிலையில் இருப்பது ஜெயலலிதா போலவே இல்லை என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பின.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் உலவும் சர்ச்சை குறித்து சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஜெயலலிதா சிலையை வளர்மதி போன்றோருடன் ஒப்பிடுவதா?. அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது ஜெயலலிதாவின் சிலை தான் என்பதை உண்மையான அதிமுக தொண்டர்கள் ஏற்கின்றனர். மனசாட்சி இல்லாத மிருகங்கள் தான் ஜெயலலிதாவின் புதிய சிலையை விமர்சிக்கும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications