நான் எங்கிருந்தாலும் என் நினைப்பு திருச்சியில் தான்! வந்து பார்க்கலன்னு கவலைப்படாதீங்க -கே.என்.நேரு
திருச்சி: திமுகவின் முதன்மைச் செயலாளர், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என பல பதவிகளை வகித்தாலும் தாம் எங்கிருந்தாலும் தனது நினைப்பெல்லாம் திருச்சி மாவட்டத்தில் தான் இருக்கும் என அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார்.
பணிச்சுமை அதிகரித்துவிட்டதால் தொடர்ந்து பயணங்கள் செல்ல வேண்டியிருப்பதாகவும் இதனால் நம்மை பார்க்கவில்லையே என யாரும் வருந்த வேண்டாம் என்றும் திருச்சி மேற்கு தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகளிடமும், தொகுதி மக்களிடமும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அமைச்சர் நேரு சிறைக்கு செல்வார் என அதிமுகவினர் பேசுவதாகவும் சிறைக்கு செல்வதை பற்றியெல்லாம் தனக்கு எந்த கவலையும் கிடையாது எனவும் நேரு பேசினார். அமைச்சர் பதவியை எப்படி ஏற்றோமோ அதே போல் கட்சிக்காக உழைத்ததற்கு சிறைக்கு செல்லவும் தயங்க மாட்டோம் என்றும் முதல் ஆளாக முன்னிற்ப்போம் எனவும் கூறினார்.
தாம் தவறு செய்திருந்தால் தண்டனையை ஏற்கத் தயார் என்றும் ஆனால் தாம் தவறே செய்யாமல் தன்னை பற்றி பேசுபவர்களின் தவறை எடுக்க ஆரம்பித்தால் அவர்கள் வெளியே வர முடியாது என பகிரங்கமாக சவால் விடுத்தார். ஆட்சியிலிருக்கும் போது மட்டும் கட்சி கரைவேட்டி கட்டும் ஆள் தாமில்லை என்றும் அதிமுகவினர் ஆட்சியில் இல்லை என்றால் கட்சி கரைவேட்டிகளை பீரோவில் வைத்து பூட்டிக்கொள்வார்கள் எனவும் கலாய்த்தார்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தன் மீது 19 பொய் வழக்குகள் போடப்பட்டதாகவும் அதில் 16 வழக்குகளில் வெளியே வந்துவிட்டதாகவும் இன்னும் 3 வழக்குகள் தான் பாக்கி இருப்பதாகவும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு திமுக தொண்டரை கூட அதிமுகவால் மிரட்ட முடியாது என்றும் இன்று சரி என்றும் சரி திருச்சி மாவட்டம் என்பது திமுகவின் கோட்டை எனக் கூறியுள்ளார்.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
திருச்சிக்கு ஓடி வந்த தென் கொரிய நிறுவனம்.. ஒரே திட்டம் 13000 பேருக்கு வேலை.. அடிசக்க! -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications