பணம்தானே முக்கியம்... தே.மு.தி.கவை ஏலம் விட்டு கூட்டணி வையுங்க- விஜயகாந்த் மீது 'நத்தம்' தாக்கு!!
நத்தம்: பணத்துக்காக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் விஜயகாந்த் தம்முடைய தே.மு.தி.க.வை பேசாமல் ஏலம் விட்டுவிட்டு யார் அதிக தொகை கொடுக்கிறார்களோ அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமே என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடுமையாக சாடியுள்ளார்.
பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க, மக்கள் நலன் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் மாறி மாறி ரகசியமாக கூட்டணி பேசுவார்த்தையை நடத்தி வருகிறது தே.மு.தி.க. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு மாதிரி நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.

ஆனால் எந்த கட்சியால் அதிக பணம், அதிக தொகுதிகள் கொடுக்க முடியுமோ அந்த கட்சியுடன்தான் விஜயகாந்த் கூட்டணி அமைப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. விஜயகாந்த்தைப் பொறுத்தவரையில் கட்சி நடத்துவதை ஒரு பிசினஸாகத்தான் செய்கிறார்.
இதை சுட்டிக்காட்டும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:
தி.மு.க., பா.ஜ.க., மக்கள் நல கூட்டணி ஆகியவற்றுடன் விஜயகாந்த் கூட்டணிக்காக பேசி வருகிறார். இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய அம்சம் பணம்தான். அதன் பிறகு தொகுதிகள்.
இப்படி பணத்துக்கக அலையும் விஜயகாந்த், தே.மு.தி.க.வை பொது ஏலத்தில் விட்டு யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமே..
இவ்வாறு நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications