அதெல்லாம் விடுங்க..சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது தெரியுமா..அமைச்சர் ராஜகண்ணப்பன் சொன்ன முக்கிய தகவல்
மதுரை: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ள நிலையில், இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணிகள் இன்னும் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
இந்தியாவை பொறுத்த அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனை அனைத்து அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த 1961ம் ஆண்டுக்கு பிறகு இங்கு சாதி வாரி கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை. இவ்வாறு கணக்கெடுப்பு நடத்தப்படுவதால் குறிப்பிட்ட சமூக மக்கள் இந்தியாவில் எத்தனை சதவிகிதம் பேர் இருக்கின்றனர் என்பது தெளிவாகிவிடும். இதன் மூலம் இடஒதுக்கீட்டை மறு நிர்ணயம் செய்ய முடியும்.

உதாரணமாக பட்டியலினத்தவர்களுக்கு 18 சதவிகிதமும் பழங்குடியினருக்கு 1 சதவிகிதமும் இட ஒதுக்கிடும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் நிர்ணயம் செய்யப்பட்ட இந்த விகிதம் தற்போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மாற்றப்படலாம். ஏனெனில் மேற்குறிப்பிட்ட இரண்டு சமூக மக்களின் எண்ணிக்கையும் கூடுதலாகியிருக்கும். இப்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் எண்ணிக்கை தெரிந்துவிட்டால் அதற்கேற்ப இடஒதுக்கீடு சதவிகிதத்தை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட சமூக மக்கள் அல்லது அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைக்கும்.
எனவேதான் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாக பார்க்கப்படுகிறது. அதேபோல பாஜகவை மற்றும் வலதுசாதி மதவாத அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை பொறுத்த அளவில் இஸ்லாமியர்கள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பில் சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை முழுமையாக தெரிந்துவிடும் என்பதால் இந்த கணக்கெடுப்பை மத்திய அரசு கிடப்பில் போட்டு வருகிறது.
ஆனால் காங்கிரஸ் காலத்தில் இந்த கணக்கெடுப்பை நடத்தியது. இருப்பினும் அக்கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த வரை இந்த கணக்கெடுப்பு குறித்த புள்ளி விவரங்களை வெளியிடவில்லை. இதனையடுத்து பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் சில குளறுபடிகள் இருப்பதால் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட முடியாது என பாஜக மறுத்துவிட்டது. சரி இதெல்லாம் மத்திய அரசின் கதை. ஆனால் மாநிலத்தில் ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
முதல் காரணம் மக்கள் தொகை விவரங்களை சேகரிப்பது, சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவை மத்திய அரசின் அதிகாரத்திற்குள் வரும் என்பதால் மாநில அரசு இது தோடர்பாக நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. பீகாரில் தற்போது இதுதான் நடந்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் ஓய்வுப்பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிமுக அமைத்தது.

இக்குழுவுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அடுத்த இரண்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் தொடங்கிவிட்டதால் இந்த பணிகளை இக்குழுவால் முழுமையாக முடிக்க முடியவில்லை. ஆனாலும் இதற்கிடையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்து அது குறித்து இடைக்கால அறிக்கை ஒன்றை இக்குழு மாநில அரசிடம் தாக்கல் செய்தது. மேலும், கூடுதல் கால அவகாசத்தை கேட்டியிருந்தது. ஆனால் அவகாசம் வழங்கப்படாததால் குழு இயங்காமல் இருந்தது.
இதனையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கின. இதுகுறித்து இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், "சாதிவாரி கணக்கெடுப்புக்காக புதியதாக பாரதிதாசன் எனும் ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நியமனமாகி 3 மாதங்கள்தான் ஆகிறது எனவே கூடுதல் கால அவகாசத்தை கேட்டிருக்கிறார். இப்பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்படும்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications