பாஜகவுக்கு அடிமையாதான் இருக்கோம்னு ஒத்துக்கிட்டார் அமைச்சர்.. ஸ்டாலின் பொளேர்!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அதிமுக அரசு அடிமையாகத்தான் உள்ளது என்பதை ஒத்துக்கொண்டுள்ளார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிமையாகத்தான் என்பதை ஒத்துக்கொண்டுள்ளார் என ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக அரசு பெரும்பான்மையை இழக்கும் பட்சத்தில் ஆளுநரை திமுக சந்திக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள குளங்கள் மற்றும் கோயில் குளங்களை தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவூரில் திமுக சார்பில் நடைபெறும் குளம் தூர் வாரும் பணியை ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசுக்கு பெரும்பான்மை குறையும் பட்சத்தில் தேவைப்பட்டால் ஆளுநரை சந்திப்போம் என்றார். மேலும் குடியரசு தலைவர் வேட்பாளரை முன்நிறுத்துவதில் ஏற்கனவே சோனியா காந்தி தலைமையில் கூடிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பின்னர் முடிவு செய்யலாம்
மத்தியில் இருக்கக்கூடிய பாஜகவினர் எந்த நிலையில் வேட்பாளரை அறிவிக்கின்றனர் என்பதை பொருத்து அதன் பின்னர் முடிவு செய்யலாம் என முடிவு செய்திருக்கிறார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். அதன் பின் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆலோசித்து முடிவு செய்யவு உள்ளதாகவும் அவர் கூறினார்.

நாங்க சொல்றததான் அவரும்..
மேலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தந்தால் என்ன என்றார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் நாங்கள் சொல்வதை தான் அமைச்சரும் சொல்கிறார் என்றார்.

அடிமையாக உள்ளோம்
நாங்கள் சொல்வதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்றுக்கொண்டுள்ளார் என கூறிய ஸ்டாலின், மாநில உரிமையை எல்லாம் பறிக்க கூடிய வகையில் மாநிலத்தை ஒரு அடிமையாக வைத்து நடத்த கூடிய வகையில் மத்திய ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என நாங்கள் கூறியதை வழிமொழிந்து அதனை ராஜேந்திர பாலாஜி ஏற்றுக்கொண்டுள்ளார்.

அமைச்சருக்கு நன்றி
இதற்காக ராஜேந்திர பாலாஜிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு குளம் தூர் வாரும் பணியின் போது ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
மகன் அறநிலைய அமைச்சர்.. ஆனாலும் சமையல் வேலை செய்யும் தாய் - பூசாரி பணியில் தந்தை.. ரமேஷின் பின்னணி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications