என்னாது.. அமைச்சர் செல்லூர் ராஜூவைக் காணாமா.. கமிஷனரிடம் புகார்!
அமைச்சர் செல்லூர் ராஜை காணவில்லை என சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அமைச்சர் செல்லூர் ராஜை காணவில்லை சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஓபிஎஸ்க்கு பயந்து மன்னார்குடி கும்பல் அமைச்சர்களையும் அதிமுக எம்எல்ஏக்களையும் நேற்று முன்நாள் இரவு முதல் சிறைவைத்துள்ளது. அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முடியாமல் அவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி சட்டசபை உறுப்பினருமான செல்லூர் ராஜுவைக் காணவில்லை என சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். அதில் செல்லூர் ராஜு தனது சட்டசபை அலுவலகம் அவரது வீடு மற்றும் தொகுதி என எங்கேயும் இல்லை என தெரிவித்தள்ளார்.
மேலும் அவரது செல்போன் எண்ணையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை உடனே கண்டுபிடித்துத் தரவேண்டும் என செந்தில்குமார் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே குன்னம் தொகுதி எம்எல்ஏ, எம்எல்ஏ கீதா உள்ளிட்டோரை காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சரை காணவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களை சிறைவைத்துள்ள மன்னார்குடி கும்பல் அதிர்ச்சியடைந்துள்ளது.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications