சர்க்கரை விலை உயர்வு சாதாரணதுதான்.. மக்களை பாதிக்காது: அமைச்சர் செல்லூர் அதிரடி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: ரேஷன் கடையில் சர்க்கரை விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது சாதாரணதுதான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். அந்த வகையில் ரேஷன் கடையில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அவர் ரேசன் கடையில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.

Minister Sellur Raju said that the price raise of sugar in the ration shop is ordinary

சர்க்கரைக்கான மானியத்தை மத்திய அரசு குறைத்த காரணத்தினால் தான் ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இதனால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

தேவையான அளவு அரிசி, கோதுமை, பாமாயில் ஆகியவை ரேஷன்கடைகளுக்காக பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வடகிழக்கு பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் உரங்கள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

விவசாயகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் வகையில் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் 7000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Sellur Raju said that the price raise of sugar in the ration shop is ordinary thing. People will not affect with this he said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற