உங்களால முடிஞ்சா பண்ணுங்க, இல்லனா கிளம்புங்க.. காண்ட்ராக்டரை எச்சரித்த அமைச்சர் டிஆர்பி ராஜா
திருவாரூர்: திருவாரூரில் ரூ.78 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் 10 மாதங்கள் ஆகியும் ஆரம்ப நிலையிலேயே இருந்ததால் கோபம் அடைந்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உங்களால முடிஞ்சா பண்ணுங்க, இல்லனா கிளம்புங்க.. அமைச்சருக்கு மட்டும் தெரிஞ்சதுனா அவ்வளவுதான்.. கிழிச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பாரு"... என ஒப்பந்த நிறுவனத்தை எச்சரித்தார்.
திருவாரூர் நகராட்சிக்கு திருவாரூர் மடப்புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீண்ட காலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிரர கொள்ளிடம் -வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சந்தைபேட்டை பகுதியில் 15 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

இது தவிர தென்றல் நகர் மற்றும் கிடாரங்கொண்டான் என 4 இடங்களில் இருந்து வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டது. இந்த நான்கு மேல்நிலை தொட்டிகள் மூலம் நகர் முழுவதும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் குடிநீர் பற்றாகுறை அதிகமாகவே உள்ளது.
இதனிடையே குடிநீர் குழாய்களும் திருவாரூர் நகரில் புதிதாக பல இடங்களுக்கு அமைக்க வேண்டியுள்ளது. அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் அம்ரூட் 2.0 என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, திருவாரூரில் ரூ 78 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்த குடிநீர் குழாய் திட்ட பணிகளை வெள்ளிக்கிழமை அன்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவாரூரில் ரூ.78கோடியில் குடிநீர் திட்டப்பணிகளை 18 மாத காலக்கெடுவில் 10 மாதம் முடிந்துவிட்ட நிலையில், நகர் முழுவதும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டிய 15 ஆயிரத்து 965 வீடுகளில் இதுவரையில் வெறும் 404 வீடுகளுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
பணியினை முடிப்பதற்கு 8 மாத காலமே எஞ்சியுள்ள நிலையில் 3 சதவிகித பணிகள் கூட முடிக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் டிஆர்பி ராஜா, இப்படி பணிகள் நடைபெற்றால் எப்போது பணிகளை முடிப்பது. எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் பணியினை முடிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஓப்பந்தம் ரத்து செய்யப்பட்டு வேறு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என ஓப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தின் திட்ட மேலாளரை எச்சரித்தார்.
இந்த ஆய்வின் போது திருவாரூர் கலெக்டர் சாரு, பூண்டிகலைவாணன் எம்.எல்.ஏ , மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, ஆர்.டி.ஒ சங்கீதா, தாசில்தார் நக்கீரன், நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications