கருணாநிதி, ஸ்டாலின் மீது மிகுந்த அன்பு கொண்ட பங்காரு அடிகளார்.. அமைச்சர் உதயநிதி உருக்கம்!
செங்கல்பட்டு: பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர் கருணாநிதி மீதும் ஸ்டாலின் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் இன்று மாரடைப்பால் காலமானதை அடுத்து தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலலாயிரக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து வருகின்றனர்.

ஆன்மீகத்தில் புரட்சியையே நிகழ்த்திய தவத்திரு பங்காரு அடிகளாரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின், பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தினோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் மீதும் - திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் திரு.பங்காரு அடிகளார் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தினோம். கலைஞர் அவர்கள் மீதும் - கழகத்தலைவர் அவர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.
— Udhay (@Udhaystalin) October 19, 2023
மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய… pic.twitter.com/xQZ6txPVGs
மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அடிகளாரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அவரை பின்பற்றும் லட்சோப லட்ச பொதுமக்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் தலைவர் திரு.பங்காரு அடிகளார் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அவருடைய இழப்பு ஆன்மீக உலகத்திற்கு பேரிழப்பு. அடிகளாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆன்மீக அன்பர்கள், பொதுமக்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/SX22v5hklb
— P.K. Sekar Babu (@PKSekarbabu) October 19, 2023
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அவருடைய இழப்பு ஆன்மீக உலகத்திற்கு பேரிழப்பு. அடிகளாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆன்மீக அன்பர்கள், பொதுமக்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications