எல்.முருகன் சொன்ன வார்த்தை.. "யோசிச்சுதான் பாருங்களேன்".. சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்!
நெல்லை: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அரசை கலைக்கும் யோசனை இல்லை என்று கூறிய நிலையில், "யோசித்துத்தான் பார்க்கட்டுமே" என சவால் விடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடியான கருக்கா வினோத், பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதைப் பற்ற வைத்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயில் முன்பாக வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருக்கா வினோத், அடுத்தடுத்து இரண்டு பாட்டில்களை வீசிய நிலையில், உடனடியாக அங்கு இருந்த போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
மேலும், செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பேசிய எல்.முருகன், "ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தியவரை திமுக வழக்கறிஞர்கள் ஜாமீனில் எடுத்துள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. தமிழ்நாட்டின் முதல் குடிமகனான ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை. இந்த விவகாரத்தில் சிபிஐ, என்.ஐ.ஏ போன்ற அமைப்புகள் விசாரித்தால் தான் முழு உண்மையை வெளியே கொண்டு வர முடியும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கே இல்லை. மத்தியில் 9 ஆண்டு காலமாக ஆட்சியில் இருக்கும் எங்களுக்கு எந்த அரசின் மீதும் அரசியலமைப்புச் சட்டம் 356-ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைக்கும் எண்ணம் இல்லை. ஆளுநர் மாளிகை மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை; ஆனாலும் ஆட்சியை கலைக்கும் யோசனை இல்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'யோசித்து தான் பார்க்கட்டுமே? என்ன நடக்கிறது என்று தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். நடந்த சம்பவம் குறித்து காவல்துறை டிஜிபி விளக்கம் அளித்து இருக்கிறார். விசாரணையும் நடைபெற்று வருகிறது." என பதில் அளித்துள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications