உலகத் தரத்தில் புது திட்டங்கள்! விளையாட்டுத் துறையில் அசத்தல் அறிவிப்புகள்! உதயநிதி வெளியிட்ட லிஸ்ட்
சென்னை: சென்னையில் உலகத் தரத்தில் துப்பாக்கி சுடுதலுக்கான சிறப்பு அகாடமி அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உதயநிதி வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு;
* புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் அமைக்கப்படும்.
*கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி அனைத்து ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தின் கீழ் உபகரணங்கள் வழங்கப்படும்.

*தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு எலைட் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிறப்பு உதவித் தொகை மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
*விளையாட்டு விடுதிகள் ரூ.10 கோடி செலவில் மறு சீரமைத்து மேம்படுத்தப்படும்.
*சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நவீன எல்.இ.டி. விளக்கு வசதி அமைக்கப்படும்.
*கோவில்பட்டியில் ஹாக்கி முதன்மை நிலை விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
*பாரா விளையாட்டுக்களை ஊக்குவிக்க நாட்டிலேயே முதல் முறையாக 6 மாவட்டங்களில் பாரா விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும்.
*மாமல்லபுரத்தில் உலக சர்ஃபிங் வீக் போட்டிகள் நடத்துவதற்கு நிதி ஒதுக்கப்படும்.
*விளையாட்டு மேம்பாட்டிற்காக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை உருவாக்கப்படும்.

*சென்னையில் 2023 ஸ்குவாஷ் உலக கோப்பை நடத்த ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்படும்.
*ஈரோடு மாவட்டம் கரட்டுப்பாளையத்தில் ஜிம்னாஸ்டிக் விடுதி மற்றும் ஜிம்னாஸ்டிக் அரங்கம் அமைக்கப்படும்.
*புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களை நிபுணத்துவ பயிற்றுநர்களாக பயன்படுத்த ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.
*ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டுக்களுக்கான அகாடமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*ஆசிய ஹாக்கி ஆடவர் சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் நடத்த நிதியுதவி.
*பொதுமக்கள் மத்தியில் உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் மாரத்தான் ஓட்டம் நடைபெறும்.
*நம்ம ஊரு விளையாட்டுத் திடல் அனைத்து ஊராட்சிகளிலும் அமைக்கப்படும்.
*தமிழ்நாடு விளையாட்டுக் கொள்கை விரைவில் உருவாக்கப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications