சென்னையில் மழை நிவாரணப் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படவில்லை : அமைச்சர் வளர்மதி தகவல்
சென்னை: சென்னையில் கனமழையால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளில் எவ்வித தொய்வும் இன்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சென்னை மாநகரில் ஒரே நாளில் 23 செ.மீ. மழை கொட்டி தீர்த்ததால் இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் தேங்கிய 289 இடங்களில், 253 இடங்களில் தண்ணீர் வெளியேற்றபட்டது.

செம்பரப்பாக்கம் ஏரியில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், கரையோரத்தில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கூவம், கொசஸ்தலம், அடையாறு கரையோரத்தில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
மழையினால் பாதிக்கப்பட்ட 25,595 மக்கள் 40 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மழை வெள்ளத்தில் 7 குடிசை வீடுகள் முழுமையாகவும், 48 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது
முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 5 ஆயிரம் ரூபாய், வேஷ்டி, சேலை மற்றும் 10 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது. பகுதியாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4 ஆயிரம் ரூபாய், வேஷ்டி, சேலை, 10 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மழை நிவாரணப் பணிகளில் எந்த தொய்வில்லாமல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகிறது. மீட்பு பணி குறித்து விரைவில் அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications