செம்மலை சென்றது ஓபிஎஸ் மீதுள்ள பாசத்தால் அல்ல.. எம்.ஆர். விஜயபாஸ்கர் பரபரப்பு பேச்சு
செம்மலை எம்எல்ஏ ஓபிஎஸ் அணிக்கு சென்றது அவர் மீதுள்ள பாசத்தால் அல்ல என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கரூர்: எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்தால் ஏற்க மாட்டேன் என்று கூறித்தான் செம்மலை ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றார் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, ஜெ.தீபா அணி ஆகிய மூன்று பிரிவுகளாக கட்சியினர் செயல்படுகின்றனர். ஆனால், தொண்டர்கள் யார் பக்கம் உள்ளனர் என்பது இன்னும் முழுமையாகத் தெளிவாகவில்லை.

அதனால், தொண்டர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில், மூன்று அணியினரும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஜெயலலிதா பிறந்தநாளை அதிமு கவினர் மூன்று அணியாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசியதாவது: இன்று அதிமுகவுக்கு எதிர்க்கட்சி திமுக அல்ல. பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் தான். சட்டசபையில் அதிமுக உறுப்பினர்கள் அமைதி காத்ததால்தான் அதிமுக அமைந்தது. கருவறை முதல் கல்லறை வரை திட்டங்களை கொடுத்தது அதிமுக அரசு.
ஓ.பி.எஸ்.அணியில் இருக்கும் எம்.எல்.ஏ செம்மலை, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்தால் ஏற்க மாட்டேன் என்று கூறித்தான் அங்கு சென்றாரே தவிர ஓ.பி.எஸ் மேல் உள்ள பாசத்தால் அல்ல. அது போலவே மற்ற எம்.எல்.ஏக்களும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே ஓ.பி.எஸ் அணிக்கு சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அதிமுக எம்எல்ஏ செம்மலை எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வருக்கான தகுதியில்லை என்றும், மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்எல்ஏக்கள் மத்தியில் அதரவில்லை என்றும் கூறியிருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications