அமைச்சர் விஜயபாஸ்கரின் உருவபொம்மை எரிப்பு...புதுக்கோட்டையில் பதற்றம் !
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரின் உருவ பொம்மையை எரித்து முத்தரையர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான விஜயபாஸ்கர், கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் கெங்கையம்மாள் சொக்கலிங்கத்திடம் சாதியை இழிவுபடுத்திப் பேசியதாக முத்தரையர் சமூகத்தினர் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் செய்ய திரண்டனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் எனக் கூறி போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டதையடுத்து, மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மாவட்ட அதிமுக அலுவலகம் மீது ஆர்ப்பாட்டம் நடந்த வந்தவர்கள் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை சம்பவ இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். அப்போது போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் இரண்டு போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே சாலை மறியல் செய்தனர். மேலும், மரங்களை வெட்டி சாலையில் மறியல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையாகி வீட்டிற்கு வாகனங்களில் சென்றுகொண்டிருந்தவர்கள் ஆங்காங்கே கூடி நின்று அமைச்சர் விஜயபாஸ்கரின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. எனவே மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications