ஈரோடு அரசு மருத்துவமனையில் அமைச்சரின் கேள்விக்கு பதில் சொல்ல திணறிய 2 நர்ஸுகள் மீது நடவடிக்கை
ஈரோடு: தனது கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய ஈரோடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 2 நர்ஸுகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார். மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்று கேட்டு வருகிறார்.
இந்நிலையில் சனிக்கிழமை ஈரோட்டில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது அவர் தாய், சேய் பிரிவில் இருந்த பெண்களிடம் அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறதா என்று கேட்டு தெரிந்து கொண்டார்.
அப்போது பணியில் இருந்த 2 நர்ஸுகளிடம் பிரசவம் ஆன பெண்களுக்கு அளிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் எப்பொழுது கொடுக்கப்படுகிறது உள்பட பல கேள்விகளை கேட்டார். அதற்கு அந்த 2 நர்ஸுகளும் பதில் கூற முடியாமல் திணறினர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும் இதை எல்லாம் கவனிக்காமல் இருந்த மருத்துவமனை சூப்பிரண்டு ராஜேந்திரனை இடமாற்றம் செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள குறைகள் 10 நாட்களில் சரி செய்யப்படும். தமிழகத்தில் 1000 குழந்தைகளுக்கு 21 குழந்தைகள் இறக்கின்றன. ஈரோட்டில் 1000 குழந்தைகளுக்கு 6 குழந்தைகள் இறக்கின்றன. ஈரோடு மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வசதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications