For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெங்கு பிடியில் இருந்து 10,000 உயிர்களை காப்பாற்றியுள்ளோம்... சொல்வது அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் 10 ஆயிரம் பேரை தமிழக அரசு காப்பாற்றியுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேரின் உயிர்களை தமிழக அரசு காப்பாற்றியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்பால் தினந்தோறும் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். டெங்குவை தடுப்பதற்காகவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்து வருகிறது.

Minister Vijayabaskar says that TN government has saved 10,000 lives from Dengue

எனினும் ஆங்காங்கே உயிரிழப்புகள் அதிகமாகிறதே தவிர, டெங்கு கட்டுப்படுத்தபாடில்லை. மேலும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் சாதாரண காய்ச்சல் வந்தாலே மக்கள் டெங்குவோ என்று அச்சம் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், டெங்கு பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் 10 ஆயிரம் பேரின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம். தமிழகத்தின் மருத்துவ வளர்ச்சி இமயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 10 சதவீதம் குறைந்துள்ளது என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

English summary
Minister Vijayabaskar says that TN government saves 10,000 lives from those who affected by Dengue fever.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X