ஆஹா.. தினகரன் வெளியில் வருகிறாரே.. குலை நடுக்கத்தில் அமைச்சர்கள்!
சென்னை: டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வருவது யாருக்கு சந்தோஷமோ என்னவோ நிச்சயம், பல அமைச்சர்களுக்குப் பெரும் சங்கடமாக இருக்கிறதாம். பலரோ நடுக்கத்தில் உள்ளனராம்.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க பேரம் பேசப்பட்டதாக தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்தது. அதில் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டார் தினகரன்.
கிட்டத்தட்ட 35 நாள் சிறை வாஸத்துக்குப் பிறகு ஜஸ்மீண் கிடைக்க, இன்று உற்சாகமாக வெளியே வருகிறார் அவர். அவர் ஜாமீனில் வெளிவரும் நிலையில், மூத்த அமைச்சர்கள் பலருக்கும் நடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

நினைப்பில் மண்
அவ்வளவு எளிதில் அவருக்கு ஜாமீன் கிடைக்காது என்றே நினைத்திருந்தனர் முதல்வர் உள்பட சீனிய அமைச்சர்கள். இலைக்கு லஞ்சம் விவகாரத்தில் ஜாமீன் கிடைத்தாலும், அமலக்கத்துறை போட்டுள்ள வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். அதனால் ரொம்ப நாளைக்கு அவர் உள்ளே இருப்பார் என நம்பிக்கையாக இருந்தனர்.

ஒரே மாதத்தில் வந்து விட்டாரே
ஆனா, ஒரே மாதத்தில் அவர் ஜாமீனில் வெளிவருவதால் பயந்துபோயிருக்கிறார்கள். காரனம், தினகரன் சிறைக்கு போவதத்கு முன்பு அவரை கடுமையாக எதிர்த்துக்கொண்டதும், சிறைக்கு சென்ற பிறகு அவரை அமைச்சர்கள் யாரும் போய் சந்திக்காமல் இருந்ததும் தான் என்கிறார்கள்.

ஆளாளுக்கு போட்ட ஆட்டம்
மேலும், கட்சியை ஆட்சியையும் கட்டுப்படுத்த ஒரு தலைமை இல்லாததால் அனைத்து அமைச்சர்களும் தனி ஆவர்த்தனத்துடன் அதிகார தொணியில் நடந்து வருவதும் தினகரனை எரிச்சல் படுத்திதிருக்கிறது. சிறையில் அவர் இருந்த நிலையிலும் தமிழகத்தில் என்னென்னெ நடந்து வருகிறது என்பதை அப் டூ டேட்டாக அறிந்தே வைத்திருக்கிறார்.

ரியாக்ஷன் காட்டமா இருக்குமோ
மேலும், கட்சியின் துணைபொதுச்செயலர் இன்னமும் அவர்தான். அதனால் வெளியில் வந்ததும் எந்த மாதிரி ரியாக்சன் காட்டப்போகிறாரோ என சீனியர்கள் ஒவ்வொருவரும் நேற்றிலிருந்து அவ்வவ்போது விவாதித்தபடி இருக்கிறார்கள்.

சென்னை சில்க்ஸை விட டென்ஷன்
இதனால், அமைச்சர்கள் மத்தியில் சென்னை சில்க்ஸ் விபத்து ஏற்படுத்திய பதட்டத்தை விட, தினகரனின் விடுதலை கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது என்று அதிமுக அம்மா வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications