ஜெ. சிகிச்சை பெற்ற போது அமைச்சர்கள் யாரும் பார்க்கவில்லை.. மீண்டும் அடித்து சொல்லும் ஓபிஎஸ்!
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அவரை அமைச்சர்கள் யாரும் பார்க்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அவரை அமைச்சர்கள் யாரும் பார்க்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள்
கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

மீண்டும் அடித்து சொல்லும் ஓபிஎஸ்
அப்போது ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது அவரை அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை என அவர் மீண்டும் உறுதியாக தெரிவித்தார். தாங்கள் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு இன்பெக்ஷன் வந்துவிடும் என சசிகலா குடும்பத்தினர் கூறியதாலேயே தாங்கள பார்க்கவில்லை என்றும் ஓபிஎஸ் கூறினார்.

நல்ல எண்ணத்தில்தான்
ஜெ.வுக்கு இன்ஃபெக்ஷன் வரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பார்க்கவில்லை என்றும் ஓ பன்னீர்செல்வம் கூறினார். ஏற்கனவே சசிகலா குடும்பத்தினர் மீது ஏற்பட்ட அதிருப்தியால் ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொண்டார் ஓபிஎஸ்.

மக்களுக்கு சந்தேகம்..
அப்போது அவர் இதையேதான் கூறினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா குடும்பத்தினர் மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளதாக தான் கூறியதையும் துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று நினைவு கூர்ந்தார்.

இன்று மீண்டும்...
தனி அணியாக பிரிந்து செயல்பட்டபோதும் ஓபிஎஸ், ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்க சசிகலா குடும்பத்தினர் யாரையும் சந்திக்கவில்லை என்றே கூறி வந்தார். இந்நிலையில் இன்று அவர் மீண்டும் இதையே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications