அமைச்சர்கள் பொறுப்பில்லாமல் வார்த்தைகளை விடக்கூடாது.. என்ன பேசுறோம்னு தெரிஞ்சு பேசுங்க: ஜி.கே.வாசன்
கோவை : அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும் என்றும், பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோவை சின்னியம்பாளையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த திமுக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த அறிவிப்பானது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. எனவே அரசு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. அந்த எண்ணத்தையும் கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான். இதனால் பல வழிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கூட அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் மேகதாதுவில் அணை கட்டுவதில் தீவிரமாக இருந்து வருகிறார். மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறிவிடும். எனவே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இன்னும் மவுனம் காக்கக்கூடாது.
பொதுமக்கள் நடமாடும் இடங்களில் விளம்பர பேனர்களை வைப்பதை அனைத்து கட்சிகளும் தவிர்க்க வேண்டும். தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது. அவர்கள் மற்றவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் வைத்திலிங்கம் இல்ல திருமணவிழாவில், டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அணியில் செயல்படுவார்கள். வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க, த.மா.கா மற்றும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரே அணியாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவோம் என பதில் அளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications