அமைச்சர்களின் கார்களில் அடைத்துக் கொண்டு செல்லப்படும் எம்.எல்.ஏக்கள்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: போகும்போது ஆம்னி பஸ்களில் ஜாலியாகப் போன எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை தற்போது கார்களில் போட்டு அடைத்துக் கொண்டு வருகின்றனர்.

கூவத்தூர் ரிசார்ட்டில் கடந்த 10 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்களை இன்று காலை எழுப்பி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக கூட்டி வருகின்றர். கூவத்தூருக்கு முதல் நாள் வந்தபோது ஆம்னி பஸ்களில் கூட்டி வந்தனர். ஆனால் ரிட்டர்ன் கார்களில் வந்து கொண்டுள்ளனர்.

Ministers take MLAs in their cars

அமைச்சர்களின் கார்களில் எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்துக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு அமைச்சரின் பொறுப்பிலும் 3 முதல் 5 எம்.எல்.ஏக்கள் வரை அடைத்துக் கொண்டு கூட்டி வருகின்றனராம். கார்களில் உள்ள இட வசதியைப் பொறுத்தும், கார்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் உள்ளே அடைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை உள்ளதாம்.

வேறு வாகனத்தில் அனுப்பினால் தப்பி விடுவார்கள் என்ற அச்சத்தால் அமைச்சர்கள் பாதுகாப்பில் கார்களில் ஏற்றி அனுப்பியுள்ளனராம். இது போதாது என்று கூடவே அடியாட்கள் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. காரை எங்கேயும் வழியில் நிறுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

இப்படி அடைத்துக் கொண்டு வரும் எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் நிரந்தரமாக விடுதலை செய்வார்களா அல்லது நிரந்தரமாக கூவத்தூரில் கொண்டு போய் மறுபடியும் அடைத்து விடுவார்களா என்பது தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+