எச்.ராஜா விவகாரத்தில் அமைச்சர் பாண்டியராஜன் அளித்த 'பாலீஷ்' பதிலை பாருங்க
சென்னை: நீதிமன்றம், காவல்துறை, தமிழக அரசு பற்றி விமர்சனம் செய்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பற்றி அமைச்சர் பாண்டியராஜன் பதிலளித்தார்.
ஆவடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், எச். ராஜா மீது போடப்பட்ட வழக்குக்கு ஏற்றார்போல் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அவர் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யலாம். அரசு குறித்து எச்.ராஜா விமர்சித்ததற்கு பதில் அளித்துள்ளோம்.
காவல்துறை பற்றி பேசியதற்கு காவல்துறையினரே விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். பெட்ரோல். டீசல் விலை உயர்வை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
ஆக மொத்தத்தில், எச்.ராஜா விஷயத்தில் அமைச்சர் நேரடியாக பதில் சொல்லவில்லை. நேரடியாக பதிலடியும் கொடுக்கவில்லை. மறைமுகமாகவே இதுபோன்ற பதில்களை அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications