வேலூர் முதல்வர் விழாவில் மின்கசிவால் தீ விபத்து - அசராமல் பேசிய எடப்பாடி பழனிச்சாமி
வேலூரில் நடைபெற்றுவரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மேடையில் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வேலூர்: வேலூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருக்கும் போதே மின்கசிவினால் லேசாக தீ பற்றியது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது.
புகை மூட்டத்திற்கு நடுவே நிறுத்தாமல் பேசி முடித்தால் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிகொண்டிருக்கும் போதே தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்மாவின் ஆன்மா, எம்ஜிஆரின் ஆன்மா இருக்கும் வரை நம்மை எதுவும் செய்யாது என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் நல்லாட்சியை கலைத்துவிட்டு ஆட்சியை பிடிக்க சிலர் முயற்சி செய்வதாக தெரிவித்தார். தமிழகத்தில் எந்த சவால் வந்தாலும் சந்திப்போம் என்றும் கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, பேச்சை குறைத்துக்கொண்டு, செயலில் தீவிரம் காட்டுவதாக கூறினார். தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மக்களையும் சென்றடைந்துள்ளது.
தமிழக கோவில்களில் சமபந்தி திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆமை கழுகு கதை ஒன்றையும் கூறி எதிர்கட்சிகளை சாடினார் எடப்பாடி பழனிச்சாமி.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications