சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கு: எஸ்.ஐ உள்ளிட்ட 4 பேருக்கு மருத்துவ பரிசோதனை
மதுரை: சிவகங்கை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டபோலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேருக்கு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஆண்மை மற்றும் வயது குறித்த பரிசோதனை நடைபெற்றது.
சிவகங்கையைச் சேர்ந்த பள்ளி மாணவிபல ஆண்டுகளாக அவரது தந்தை, அண்ணன், உறவினர்கள் உள்பட ஏராளமானோர் பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக, சிறுமியின் அத்தை செல்வி, கடந்த ஜூன் 5ல் சிவகங்கை மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, சுகந்தியின் தந்தை முத்துப்பாண்டி, சிவகங்கை டவுன் போலீஸ் எஸ்ஐ சங்கர், கண்டக்டர் நமச்சிவாயம் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் முதல் ஏடிஜிபி என சுமார் 28 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். எஸ்ஐ சங்கர், கண்டக்டர் நமச்சிவாயம் ஆகியோரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அதேபோல், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, சென்னையில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும் சிறுமியிடமும் சிபிசிஐடி போலீஸார் வாக்குமூலம் பெற்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது அத்தை செல்வி உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் போலீசார் விசாரணை செய்து, அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கில் கைதான 10 பேரில், சிறுமியின் அண்ணன் கார்த்திக் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
சிறுமியை இதுவரை பார்த்ததே இல்லை என்று கைதான காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கை திசை திருப்ப முயல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார் சிவகங்கை மகளிர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
இதில், சப். இன்ஸ்பெக்டர் சங்கர், சுரேஷ்குமார், செந்தில்குமார், அரவிந்த் ஆகிய நான்கு பேருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்த நீதிபதி ஜெயராஜ் அனுமதி வழங்கினார். இதையடுத்து, நான்கு பேருக்கும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்மை மற்றும் வயது குறித்த பரிசோதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை சிறுமி பலாத்கார வழக்கு மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதால் வழக்கில் சிக்கியுள்ள காவல்துறை உயரதிகாரிகளிடையே அச்சம் எழுந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications