செங்கோட்டை ரயில் நிலையத்தில் சேர், பூந்தொட்டிகள் உடைப்பு
செங்கோட்டை: செங்கோட்டை ரயில் நிலையத்தில் சேர்கள், பூந்தொட்டிகள், இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
தமிழக-கேரள எல்லை பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவில்
யாரே சில மர்ம ஆசாமிகள் ரயில் நிலையத்திற்குள் புகுந்து முதல் நடைமேடையில் வாயிலில் இருந்து கடைசி வரை இருந்த அழகு
பூந்தொட்டிகளை உடைத்தும், பயணிகள் அமரும் இருக்கைகளை சேதப்படுத்தியும், அங்கு பணிபுரியும் ஒருவரின் இரண்டு சக்கர
வாகனத்தை சேதப்படுத்தியும் விட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து ரயில் நிலைய மேலாளர் ராமகிருஷ்ணன் ஆர்.பி.எப்.போலீசில் புகார் செய்தார். புகாரைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ரயில்வேயில் பணிபுரியும் சில ஊழியர்கள் நள்ளிரவில் குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் ரயில்வே வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
