என் கணவரை கண்டுபிடித்து தாருங்கள்: மாயமான விமானத்தின் பைலட்டின் மனைவி மோடிக்கு ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாயமான டோர்னியர் விமானத்தின் திசைகாட்டி சுபாஷ் சுரேஷின் மனைவி தீபா தனது கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் சிஜி791 கடந்த 8ம் தேதி சென்னையில் இருந்து பாக்ஜலசந்திக்கு ரோந்து பணிக்கு சென்றது. விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே. சோனி, திசைகாட்டி சுபாஷ் சுரேஷ்(28) ஆகியோர் இருந்தனர். விமானம் அன்று இரவு சென்னைக்கு திரும்புகையில் நாகை அருகே மாயமானது.

விமானம் மாயமாகி 8 நாட்களாகியும் அது குறித்து உறுதியான தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் சுபாஷின் மனைவி தீபா ட்விட்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தீபா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

@PMOIndia மாயமான சிஜி791 விமானத்தில் சென்ற என் கணவர் பைலட் சுபாஷ் சுரேஷ் பற்றி 8 நாட்களாக எதுவும் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+