For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காணாமல் போன ஹெலிகேம்.. தேடி கண்டுபிடித்த சென்னம்மா.. பரிசு தராமல் 'எஸ்' ஆன அதிகாரிகள்

காணாமல் போன ஹெலிகாம் கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பரிசு கொடுப்பதாக சொல்லி ஏமாற்றிய அதிகாரிகள்- வீடியோ

    செங்கம்: எதிர்பார்த்தது உடனடியாக கிடைக்கவில்லையென்றால் அது எவ்வளவு பெரிய ஏமாற்றம் தரும் என்பதுதான் இச்சம்பவம்.

    அதிகாரிகள்: "நிலத்தை அளக்கும் ஹெலிகேம் காணாமல் போய்விட்டது. கண்டுபிடித்து தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்"

    கிராம மக்கள்: "பரிசு தொகை எவ்வளவு?"

    அதிகாரிகள்: "50 ஆயிரம் ரூபாய்"...

    கிராம மக்கள்: "50 ஆயிரமா?" என வாய்ப்பிளந்து ராத்திரி பகல் என பார்க்காமல் மாயமான ஹெலிகாமை தேட ஆரம்பிக்க தொடங்கினர். இதுதான் செங்கத்தில் கடந்த 2 தினங்களாக நடந்து கொண்டிருந்தது.

    நரசிங்கநல்லூரில் அதிகாரிகள்

    நரசிங்கநல்லூரில் அதிகாரிகள்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக நிலம் மதிப்பீடு செய்யும் பணி பொதுமக்களின் எதிர்ப்பையும்மீறி நடந்து வருகிறது. அதன்படி வனப்பகுதிகள், பாசன கிணறுகள், அடர்ந்த மரங்கள், போன்றவற்றின் விவரங்களை கண்டறிந்து நில மதிப்பீடு செய்ய ஹெலிகேம் பயன்படுத்தப்பட்டது. இந்த பணியில் முக்கால் பாகம் அளவிடும் பணி முடிந்துவிட்டது. மீதமுள்ள பணிகளை முடிக்க கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதிகாரிகள், செங்கம் அடுத்த நரசிங்கநல்லூர் மலை கிராமத்துக்கு வந்தனர். தங்கள் பணியையும் அங்கு ஆரம்பித்தனர்.

    மாயமான ஹெலிகேம்

    மாயமான ஹெலிகேம்

    ஹெலிகேம் பயன்படுத்தி நிலத்தை அளக்க எண்ணி, ரிமோட்டை இயக்கினர். ஆனால் ஹெலிகேம் இயங்கவில்லை. அது தன் கட்டுப்பாட்டை இழந்துவிட்டிருந்தது. பலமுறை ஊழியர்கள் முயற்சித்தும், ஹெலிகேம் வரவேயில்லை. கடைசியில் பார்த்தால் ஹெலிகேமையே அங்கு காணோம். திடீரென மாயமாகிவிட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நில

    50 ஆயிரம் ரூபாய்

    50 ஆயிரம் ரூபாய்

    கடைசியில் வேறு வழியில்லாமல், அதிகாரிகளும், ஊழியர்களும், கிராம மக்களிடம் சென்று, "ஹெலிகேம் காணாமல் போய்விட்டது, கண்டுபிடித்து தருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்" என்று அறிவித்தனர். பரிசுத் தொகை அறிவித்தது பரபரப்பாக சுற்றுவட்டாரத்தில் பரவி விட்டது. இதைக்கேட்ட கிராம மக்கள் நேற்று முன்தினம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். ஹெலிகேம் கிடைக்கவில்லை. நேற்றும் தேட ஆரம்பித்தனர்.

    ஏமாந்த சென்னம்மாள்

    ஏமாந்த சென்னம்மாள்

    இந்நிலையில் தொரபாடி கிராமத்தை சேர்ந்த சென்னம்மாள் என்பவர் அங்குள்ள வன பகுதி ஒன்றில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஹெலிகேம் விழுந்து கிடப்பதை பார்த்தார். அதை கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து அதைக் கொண்டு, செங்கம் டிஎஸ்பியிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார். பின்னர் தனக்கு "50 ஆயிரம் பரிசு" கிடைக்கும் என அங்கேயே நின்று கொண்டிருந்தார். ஆனால், போலீசாரோ, அந்த சென்னம்மாளிடம், "நாங்கள் அந்த பரிசு தொகையை அறிவிக்கவில்லையே.. நில மதிப்பீடுக்குழுதானே அறிவித்தது... அவர்கள்தான் பரிசு வழங்குவது குறித்து முடிவு செய்வார்கள்" என்றனர். இதைக்கேட்டதும் சென்னம்மாள் ஏமாற்றமடைந்து வாடிய முகத்துடனே திரும்பி சென்றார்.

    English summary
    Missing helicam discovery near Chengam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X