பிசுபிசுத்த அழகிரி ஆலோசனை கூட்டம்.. பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு
Recommended Video

மதுரை: செப்டம்பர் 5ம் தேதி சென்னையில், கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடத்த உள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்திருந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் இன்று அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுகவில் மீண்டும் அழகிரியை சேர்த்துக்கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லை. எனவே ஸ்டாலினுக்கு, நெருக்கடி அளிக்கும் வகையில் செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் அமைதி பேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார். அதில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆதரவாளர்களுடன் மதுரையில் அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மதுரையில் டிவிஎஸ் நகரில் உள்ள அழகிரியின் வீட்டில் வைத்து, ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அழகிரியின் ஆதரவாளர்கள் மற்றும் ஸ்டாலின் அதிருப்தியாளர்கள் இதில் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால், இதுதொடர்பான செய்திகளையும், புகைப்படங்களையும் பதிவு செய்ய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் இடத்தை விட்டு பத்திரிகையாளர்களை, அழகிரி ஆதரவாளர்கள், வெளியேற்றி உள்ளனர்.
எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்றும், அது வெளியே தெரிந்துவிட கூடாது என்பதால் ஊடகங்களை அழகிரி தரப்பு தவிர்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதிய ஆட்கள் வராததால்தான் தனது திருமண மண்டபத்தில் நடத்தவிருந்த ஆலோசனை கூட்டத்தை கூட வீட்டிலேயே நடத்திவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications