Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக, அதிமுக அதிருப்தியாளர்களை வைத்து ரஜினி பிம்பத்தை கட்டமைக்கும் பாஜக.. உள்ளடி வேலைகள் ஜரூர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    BJP Believe Rajini: மக்களிடம் மதிப்பை இழந்த ரஜினியை நம்பும் பாஜக- வீடியோ

    சென்னை: திமுக, அதிமுக அதிருப்தியாளர்களை இணைத்து ரஜினி என்கிற பிம்பத்தை கட்டமைக்கும் வேலைகளில் பாஜக படுஜரூராக ஈடுபட்டு வருகிறது. மு.க. அழகிரி தலைமையில் திமுக அதிருப்தியாளர்களை ஒன்று திரட்டும் உள்ளடி வேலைகள் படுதீவிரமாக நடைபெறுகிறது.

    வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் எளிதாக கட்சிகள் சிக்கியதால் அவற்றை வளைத்துப் போட்டு அரியாசனத்தை கைப்பற்றி அதிகாரத்தை ருசிக்கிறது பாஜக. திரிபுராவில் காங்கிரஸ் கட்சியே பாஜக வசமானது.

    மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளே பாஜகவினராகினர். தற்போது தென்மாநிலங்களுக்கு குறிவைத்து வியூகத்தை செயல்படுத்துகிறது பாஜக. ஆந்திராவில் தெலுங்குதேசம் எம்.பிக்களை இழுத்து வேர்பிடிக்க துடிக்கிறது பாஜக.

    ரஜினியை இறக்கும் பாஜக

    ரஜினியை இறக்கும் பாஜக

    தமிழகத்தில் அதிமுக என்கிற கட்சியே கிடைத்தும் கூட பாஜக மீதான உச்சகட்ட எதிர்ப்பால் கனவு அம்போவானது. இதையடுத்துதான் ரஜினிகாந்தை களமிறக்கிப் பார்த்துவிடுவது என கோதாவில் குதித்திருக்கிறது அக்கட்சி.

    ரஜினி- அழகிரி பேச்சுவார்த்தை

    ரஜினி- அழகிரி பேச்சுவார்த்தை

    பாஜகவின் தற்போதைய கணக்கு, திமுக மற்றும் அதிமுகவில் இருந்து கணிசமானோர் வெளியேறி ரஜினி தலைமையிலான கட்சியில் இணைந்துவிட்டாலே இங்கே காலூன்ற வசதியாகிவிடும் என்பதுதான். இதற்காக திமுகவில் இருந்து நீக்கப்பட்டு ஒதுங்கியிருக்கும் மு.க. அழகிரி- ரஜினிகாந்த் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

    உறுதி தந்த அழகிரி வட்டாரம்

    உறுதி தந்த அழகிரி வட்டாரம்

    அண்மையில் மதுரையில் நடைபெற்ற மு.க. அழகிரி இல்ல திருமண விழாவுக்கு வந்த ஆதரவாளர்களுடன் அழகிரியின் வலது, இடதுகள் இதை தெரிவித்து நம்பிக்கையோடு இருங்கள்- களம் காத்திருக்கிறது.. அண்ணன் முடிவெடுப்பார் என உசுப்பேற்றி அனுப்பியிருக்கின்றனர். அதிமுகவைப் பொறுத்தவரை ஓபிஎஸ்-க்கு அதிகாரத்தைக் கொடுத்து சிதறிப் போன கட்சியின் வாக்குகளை மீட்டெடுக்க முயற்சிக்கிறது பாஜக.

    ரஜினி- அதிமுக- திமுக

    ரஜினி- அதிமுக- திமுக

    இதற்கு முதல்வர் எடப்பாடி தரப்பு ஒத்துவராத நிலையில் அதிமுகவில் அடுத்த தர்மயுத்தம் ரஜினிகாந்துக்கானதாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. திமுக, அதிமுக அதிருப்தி நிர்வாகிகளை இழுத்து அவர்களுக்கு ரஜினியை தலைமை ஏற்க வைப்பது, அதன் மூலமாவது தமிழகத்தில் அறுவடை கிடைத்துவிடாதா? என்பதுதான் பாஜகவின் ஏக்கம்.

    ஸ்டாலினைப் போல முதல்வர் வேட்பாளர்?

    ஸ்டாலினைப் போல முதல்வர் வேட்பாளர்?

    அழகிரி தரப்பைப் பொறுத்தவரையில் முதல்வர் நாற்காலிக்குத்தான் குறி வைக்கிறாராம். அல்லது ஸ்டாலின் அமர்ந்த துணை முதல்வர் நாற்காலியாவது கிடைக்கும் என்கிற நம்பிக்கையோடு ரஜினி தரப்புடன் பேச்சுவார்த்தை தொடருகிறதாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+