கோபாலபுரம் வந்தார் மு.க.அழகிரி.. கருணாநிதியின் உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் விசாரணை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, அவரது மகன் அழகிரி மதுரையில் இருந்து சென்னை வந்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தந்தை கருணாநிதியை பார்க்க மதுரையிலிருந்து சென்னை பறக்கிறார் அழகிரி

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக, அவரது மகன் அழகிரி மதுரையில் இருந்து சென்னை வந்து இருக்கிறார்.

    திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார்.

    MK Azhagiri will meet DMK leader Karunanidhi today in Chennai

    இந்த நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு தலைவர்கள், நேற்று இரவோடு இரவாக அவரது வீட்டிற்கு வந்தார்கள்.

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நேற்று கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தனர். அதேபோல் நடிகர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன் , நடிகர் சரத்குமார், ஆகியோரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க அவரது மகன், அழகிரி சென்னை வந்துள்ளார். மதுரையில் இருந்து அவர் சென்னை வந்துள்ளார். கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உடல்நிலை பற்றி அவர் மருத்துவர்களிடம் விசாரணை செய்தார். இன்னும் உறவினர்கள் பலர் சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+