திமுகவின் தலைவரானார் ஸ்டாலின்... துரைமுருகன் பொருளாளராக பதவியேற்றார்
Recommended Video

சென்னை: திமுகவின் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இன்று பொதுக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் திமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவுகளால் மறைந்தார். இதையடுத்து அவரது பதவியில் ஸ்டாலினை அமர்த்துவது என்று மூத்த நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
இந்த பதவிக்கான தேர்தல் 28-ஆம் தேதி நடைபெறும் என்றும் அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்நிலையில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினை தவிர வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை.

அறிவிப்பு
மேலும் வேட்புமனுக்களை வாபஸ் செய்ய நேற்றைய தினம் கடைசி நாள் என்ற நிலையில் ஸ்டாலின் தனது வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. இதனால் அவர் போட்டியின்றி திமுக தலைவராகிறார் என்று அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அறிவித்தார்.

திமுகவினர் கொண்டாட்டங்களில் குதித்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் பொதுக் குழு அண்ணா அறிவாலயத்தில் கூடியது. இதில் தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து திமுகவினர் கலைஞர் அரங்கத்திலேயே கொண்டாட்டங்களில் குதித்தனர்.

உற்சாகத்தில் தொண்டர்கள்
திமுக தலைவராக ஸ்டாலின் வந்துள்ளதை திமுகவினர் தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்து திமுகவை அண்ணாதுரை தொடங்கியபோது, அவருக்கு மதிப்பு கொடுத்து தலைவர் பதவியை காலியாக வைத்திருந்தார். அதன் பின்னர் கருணாநிதி தலைவரானார். அதைத் தொடர்ந்து தற்போது 2வது தலைவராக அவரது மகன் ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.

கருணாநிதி மறைந்தார்
திமுகவில் துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள மு.க.ஸ்டாலின் தலைவர் பொறுப்புக்கு தற்போது உயர்ந்துள்ளார். எந்தப் போட்டியுமின்றி அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications