ஜெ. சவப்பெட்டி வைத்து வாக்கு சேகரிப்பு... ஓபிஎஸ் அணிக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
ஜெயலலிதா சவப்பெட்டியை வைத்து வாக்கு சேகரித்த ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா சவப்பெட்டியை வைத்து வாக்கு சேகரித்த ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் சவப்பெட்டியை போன்று மாதிரியை தயார் செய்து ஓபிஎஸ் அணியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதற்கு சசிகலா அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் அந்த முயற்சியை கைவிட்டனர்.

எனினும் சவப்பெட்டியை வைத்து அரசியல் நடத்தும் ஓபிஎஸ் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோரை கைது செய்ய கோரி ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் முன்பு சசிகலா அணியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த செயலுக்கு ஓபிஎஸ் அணிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சவப்பெட்டியை வைத்து வாக்கு சேகரிப்பது ஈவு இரக்கமற்ற, மனிதநேயமற்ற செயல். அநாகரிக பிரசாரம் நடத்தும் பாண்டியராஜனை திமுக சார்பில் கண்டிக்கிறேன். இந்த பிரசாரத்துக்கு அனுமதி அளித்த ஓ.பன்னீர் செல்வத்தையும் கண்டிக்கிறேன்.
இதய தெய்வம் என புகழ்ந்த ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் செலுத்தும் நன்றிக் கடன் இதுதானா. இந்த பிரசாரம் பாண்டியராஜனுக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஜெயலலிதா மீதான வன்மத்தையே காட்டுகிறது. சுயலாபத்துக்காக ஜெ.உருவத்தை எந்த எல்லைக்கும் எடுத்து செல்வர் என சாடியுள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications