காவிரி உரிமை மீட்பு.. நாளை மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறார் ஸ்டாலின்
திமுக சார்பில் நாளை மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக சார்பில் நாளை மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் ஏப்ரல் 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் காவிரி உரிமை மீட்பு பயணமும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் திடீரென வள்ளுவர் கோட்டத்துக்கு சென்று ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் திமுக இன்று 4-ஆவது நாளாக காவிரி வாரியத்துக்காக தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், திமுக சார்பில் நாளை மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
இதில் காவிரி உரிமை மீட்பு பயணம் குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications