நெல்லை மாணவன் தற்கொலை சம்பவம்: குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல்

நெல்லை மாணவன் தினேஷ் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி நெல்லை மாணவன் தினேஷ் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி கிராமத்தில் மாடசாமியின் மகன் தினேஷ் நல்லசிவன் (17). இவரது தந்தை மது அருந்தும் பழக்கத்தை விடாததால் மனமுடைந்து ரயில்வே மேம்பாலத்தில் பள்ளிச் சீருடையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

MK Stalin expresses his condolence to the family of Nellai Dinesh suicide

மேலும் டாஸ்மாக் கடைகளை மூடுமாறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், தனது தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாத விரக்தியில் நெல்லையை சேர்ந்த பள்ளி மாணவர் தினேஷ், தன் பள்ளிச்சீரூடையுடன் தற்கொலை செய்திருப்பது வேதனையளிக்கிறது. மாணவரின் மரணத்தை என் சொந்த குடும்பத்தில் நிகழ்ந்த இழப்பாக எண்ணி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகமெங்கும் எங்கெங்கு டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என திட்டமிட்டு, மதுபான விற்பனைக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் டாஸ்மாக் ஆட்சியால் அப்பாவி சிறுவனின் உயிர் பறிக்கப்பட்டதோடு மேற்கொண்டு இந்த அரசுக்கு எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றனவோ என்ற அச்சம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+