மணப்பாடு படகு விபத்து.. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
மணப்பாடு படகு விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: மணப்பாடு படகு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடு பகுதியில் 20-க்கும் மேற்பட்டோர் மீனவர் படகில் கடலுக்கு சுற்றுலா சென்றனர். அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் பாரம் தாங்காமல் படகு கடலுக்குள் கவிழ்ந்தது. இதில் 10 பலியாகினர்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
''தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, மணப்பாடு பகுதியில் கடலில் படகு கவிழ்ந்து பத்து பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.
கழக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் எனது அறிவுறுத்தலின் படி, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறி இருக்கின்றார். எத்தனை தான் ஆறுதல் சொன்னாலும் இழந்தவர்களின் குடும்பத்தினரின் துயரங்களை தணிக்க இயலாது. இதுபோன்ற விபத்துகள் இனி நடக்காமல் எப்பாடு பட்டேனும் உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.
ஆகவே கடலுக்குள் படகில் பயணம் செய்ய விரும்புவோர் மிகவும் பாதுகாப்பான முறையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழக அரசும் அதற்கு ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.'' இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications