ஜல்லிக்கட்டு- மக்களின் கொந்தளிப்பை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும்- ஸ்டாலின் எச்சரிக்கை
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனே அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனே அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; இல்லையெனில் தமிழக மக்களின் கொந்தளிப்பை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இத்தடை தொடருவதால் 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

இந்த தடையை நீக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது உடனே தீர்ப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணா நிதிநீர் பிரச்சனைக்காக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பது வரவேற்புக்குரியது.
ஆனால் இதேபோல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடியையும் முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்திருக்க வேண்டும். தற்போதைய நிலையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு உடனே அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்.
இல்லையெனில் தமிழக மக்களின் கொந்தளிப்பை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும் என் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications