3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ்
கரூர்: கரூரில் வசதியற்ற 3 ஏழைக் குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை வழங்கினார் கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்எல்ஏ காமராஜ்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டவர் அதிமுகவைச் சேர்ந்த காமராஜ். இவர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டதிலிருந்து தனது எம்.எல்.ஏ. பதவிக்கான மாதச் சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் கரூர் மாவட்டதிற்குட்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மாணவர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், மாநிலத்தில் முதலிடம் பிடித்த ஏழை மாணவனின் மருத்துவபடிப்புக்கு ஊக்கநிதி, மனநலம் பாதித்த குழந்தைகளுக்கான உதவி என மாதா மாதம் வழங்கி வருகிறார்.
இடையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது தனது மாதச் சம்பளத்தை கோவில்களுக்கும், பிறவற்றுக்கும் தானமாக அளிக்கவும் செய்தார்.

இந்த நிலையில், இன்று ஆத்தூரில் வசிக்கும் சுகன்யா என்பவருக்கு ஹிரண்யா அறுவை சிகிச்சைக்காகவும், தீபக் என்பவருக்கு மூலநோய் மேல் சிகிச்சைக்காவும், விஜயலட்சுமி என்பவருக்கு புற்றுநோய் மேல் சிகிச்சைக்காவும் தனது 40வது மாத ஊதியத்தை வழங்கி ஆறுதல் தெரிவித்தார் எம்.எல்.ஏ காமராஜ்.
நிதி உதவியை பெற்று கொண்ட பயனாளிகள் தமிழக முதல்வருக்கும், எம்.எல்.ஏவுக்கும் நன்றி தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications