ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வை காணவில்லை... அதிமுக சுவரொட்டியால் நெல்லையில் பரபரப்பு !
நெல்லை: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வை காணவில்லை என அதிமுகவினரே ஒட்டிய சுவரொட்டிகளால் திருநெல்வேலி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அதிமுகவில் முக்கிய புள்ளியாக இருந்தவர் நயினார் நாகேந்திரன். கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் அமைச்சர் பதவி வகித்தார்.

நெல்லை சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ-வாக இருந்து வரும் நயினார் நாகேந்திரன் சமீப காலமாக கட்சியின் தலைமையால் ஓரங்கட்டப்பட்டு கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாமல் உள்ளார். இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதும் சந்தேகம் எனவும் கூறப்படுகிறது. இதனால் அவர் வெற்றி பெற்ற நெல்லை சட்டசபை தொகுதியை குறி வைத்து ஆளுங்கட்சியை சேர்ந்த பலரும் காய் நகர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையின் கீழ் கல்வெட்டு ஒன்று உள்ளது, அதில் நேற்று ஒரு விநோத சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில், நயினார் நாகேந்திரன் புகைப்படத்துடன் ‘எம்.எல்.ஏ-வை காணவில்லை' என தலைப்பிடப்பட்டு ‘இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த அவருக்கான சிறப்பு தகுதி இரு துறைகளில் அமைச்சராக இருந்தது'என குறிப்பிடப்பட்டுள்ளது.
10 வருட குடும்ப சொத்து ரூ.500 கோடி எப்படி?, செய்த சாதனை- தமிழகம் முழுவதும் 46 ஓட்டல்கள் எப்படி? சென்னையில் 5 ஸ்டார் ஓட்டல்கள் எப்படி?- சிறப்பு சாதனை- கடந்த நான்கரை வருடமாக தொகுதி மண்ணை மிதிக்கவில்லை. சட்டமன்ற அலுவலகத்தை திறக்கவில்லை.
தனித்திறமைகள்- நான்கரை வருடங்களாக சட்டசபையில் மவுனமாக யோகா பயிற்சி செய்தது. லட்சியம்- 2016ல் திருநெல்வேலி தொகுதியில் மீண்டும் மக்களுக்கு கும்பிடு + ரூ.15 கோடி ரெடி- பரிசாக கொடுத்து எம்எல்ஏ ஆவது.
இவரை காணாது தவிக்கும் நெல்லையில் ஓட்டுப்போட்ட மக்கள் தேடுகிறார்கள். கண்டுபிடித்து போட வேண்டிய இடம் நெல்லையப்பர் கோயில் உண்டியல், திருநெல்வேலி டவுன். வெகுவிரைவில் சொத்துக்கள் பட்டியல் வரும். இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆரின் சிலையின் கீழே அந்த கட்சியின் எமஎல்ஏவை காணவில்லை என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications