மானாமதுரையே மலைத்து போனது.. சாண்டா கிளாஸ் வேஷம் போட்டு வந்த பெண்.. யாருன்னு பார்த்தா, இன்ப அதிர்ச்சி
மானாமதுரை: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் சாண்டா கிளாஸ் வேடம் இட்டு வந்த பெண்ணை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் எல்லாம் மலைத்தே போய்விட்டனர்.
மானாமதுரையை சேர்ந்தவர் தமிழரசி. இவர் 2001 ஆம் ஆண்டு மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளராக சமயநல்லூர தொகுதியில் தேர்வு செய்யப்பட்டார்.

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத் துறை அமைச்சராக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் இருந்தார். இதைத் தொடர்ந்து அவர் 2011 ஆம் ஆண்டு மானாமதுரை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மானாமதுரையில் வென்றார். தற்போது இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. இவர் திமுக எம்பி கனிமொழியின் நம்பிக்கைக்குரியவராக திகழ்கிறார். அவருக்கு நெருக்கமானவரும் கூட! இவர் பதவியேற்றது முதல் மானாமதுரைக்கு நலத்திட்டங்களை செய்துவருகிறார்.
இ சேவை மையம், அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தி மாணவர்களுக்கு பாடம் எடுப்பது, சமுதாய வளைகாப்பு விழா நடத்தி வைப்பது, மாணவிகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டுவது உள்ளிட்ட நலத்திட்டங்களை செய்திருந்தார். இந்த நிலையில் இவர் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி மக்களை சந்தித்து பரிசு பொருட்களை கொடுத்துள்ளார்.
சாண்டா கிளாஸ் வேடமணிந்து கிறிஸ்துமஸ் விழவில் தமிழரசி கலந்து கொண்டார். மானாமதுரை புனித அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடும் பெருமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை கூறினர். இந்நிகழ்வில் இரண்டாவது வார்டு உறுப்பினர் இந்துமதி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வளர்மதி இரண்டாவது வார்டு செயலாளர் திருமுருகன், மேலபசலை ஊராட்சி மன்ற தலைவர் சிந்துஜா சடையப்பன் மற்றும் கிறிஸ்தவ பெருமக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில்தான் தமிழரசி யாரும் எதிர்பார்க்காத சாண்டா கிளாஸ் வேடத்தில் சென்று குழந்தைகள், பெரியவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் இனிப்புகளையும் வழங்கினார். தமிழரசியை சாண்டா கிளாஸ் வேடத்தில் பார்த்ததும் முதலில் யாரென்று தெரியாமல் மக்கள் விழித்தனர். பிறகு அவர் அணிந்திருந்த முகமூடியை கழற்றியவுடன்தான் அவர் தமிழரசு என தெரியவந்தது.
இதே போல் ஆந்திரா நகரி தொகுதியில் அமைச்சர் ரோஜாவும் சாண்டா கிளாஸ் வேடமணிந்து கிறிஸ்துமஸுக்கு புத்தாடைகளையும் சாக்லேட்டுகளையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications