மாட்டிறைச்சி தடையை நீக்க.. ஓடும் ரயிலை மறித்து மமகவினர் போராட்டம்.. கோவையில் பதற்றம்
மாட்டிறைச்சி தடையை கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் கோவையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
கோவை: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை மாணவர்கள், சமூக இயக்கத்தினர், நடத்தி வருகின்றனர்.

ரயில் மறியல்
இந்நிலையில், இன்று கோவையில் மனித நேய மக்கள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி, இன்று மாலை 100க்கும் மேற்பட்ட மமகவினர் கோவை ரயில் நிலையத்தை நோக்கி வந்தனர்.
தள்ளுமுள்ளு
அப்போது, அங்கிருந்த போலீசார் அவர்களை ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். போராட்டக்காரர்கள் தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.
கைது
போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் ரயில் நிலையத்திற்குள் சென்று அப்போது அங்கு வந்த ஒரு பயணிகள் ரயிலை மறித்தனர். இதனைத் தொடர்ந்து மமகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
எதிர்ப்பு முழக்கம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டுக்கறி தடைக்கு எதிராக முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினார்கள். தடையை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று மமகவினர் தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications