இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து கொண்டே செல்கிறது. இதனால் இன்று தமிழ்நாட்டில் மழை பெய்யும்.
வங்ககடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. வெப்பசலனமும் இந்த மழைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
[கை பிடித்து கதறி அழுது... மாமா... நீ சாப்ட்டியா.. இது ஒரு தாடிக்காரனின் "பக்கா" காதல் கதை!]

வலுவானது
ஒரு வாரத்திற்கு முன் வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இது வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்த புயல் ஓமன் கரையை நோக்கி நகரும்.

மிதமான மழை பெய்யும்
இந்த சமயத்தில் தமிழகத்தில் மழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்யும். டெல்டா பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ராமேஸ்வரம், குமரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கனமழை பெய்யாது
முன்பு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்து இருந்தது போல இன்று கனமழை பெய்யாது. புயல் ஓமனை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு கிடையாது. ஆனால் கடலோர பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

என்ன எச்சரிக்கை
கடல் அடுத்த சில நாட்களுக்கு கொந்தளிப்பாக காணப்பட வாய்ப்புள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் இன்றில் இருந்து 12ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications