கொட்டோ, கொட்டுனு கொட்டும் தண்ணீர்... குற்றால அருவிகளில் குவிந்தனர் சுற்றுலா பயணிகள்
தென்காசி: குற்றாலம் அருவியில் மிதமான தண்ணீர் கொட்டுவதால், ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்கின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருவதால் தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவுகிறது. குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் முதல் தண்ணீர் வெள்ளமாக கொட்டத் தொடங்கியுள்ளது.

ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வார முறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. மெயினருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை குறைந்தபின் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. தற்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பெய்த மழையினால் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் திரண்டு வந்து ஆனந்தமாக அருவிகளில் குளித்து செல்கின்றனர்.
குளிர்ந்த காற்றின் பின்னணியில், அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குற்றாலத்தில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. இதனிடையே, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications