நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி.. அடிக்கடி "வெளியில்" போவதைக் குறைக்கப் போகிறாராம் மோடி!
டெல்லி: எப்பப் பார்த்தாலும் வெளிநாட்டிலேயே இருக்கிறார். இந்தியாவிலேயே இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இந்தப் புது வருடத்தில் முற்றுப் புள்ளி வைக்கப் போகிறாராம் பிரதமர் மோடி. அதாவது இந்த வருடம் அதிக அளவில் வெளிநாடு பயணம் மேற்கொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் மோடி.
2016ம் ஆண்டு தனது வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்கும் முடிவை எடுத்துள்ள மோடி இதுதொடர்பாக வெளியுறவுத்துறையுடன் கலந்து ஆலோசிக்கவும் செய்துள்ளார்.
தேவைப்படும் பயணங்களை மட்டுமே மேற்கொள்வது என்றும் எல்லா பயணங்களையும் மேற்கொள்வதில்ல என்றும் மோடி முடிவெடுத்துள்ளாராம். மேலும் உள்ளூர் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.

லிஸ்ட்டைக் குறைங்கப்பா
இதுதொடர்பாக அவர் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையின்போது தனது சுற்றுப்பயண எண்ணிக்கையை இந்த ஆண்டில் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளாராம்.

சில நாடுகள் மட்டுமே
அதன்படி இந்த வருடத்தின் முதல் பாதியில் ஓரிரு வெளிநாட்டுப் பயணத்தையே பிரதமர் மேற்கொள்ளவுள்ளாராம். முக்கியமான சர்வதேச மாநாடுகளில் மட்டுமே அவர் கலந்து கொள்வாராம்.

19 மாதத்தில் 33 நாடுகள்
மோடி பிரதமராகி 19 மாதங்களாகி விட்டது. இந்த காலகட்டத்தில் அவர் இதுவரை 33 நாடுகளுக்கு போய் வந்து விட்டார். மேலும் மூன்றில் இரண்டு பங்கு உலகத் தலைவர்களை அவர் சந்தித்து விட்டார். அவர் பார்க்காத தலைவர்கள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணக் கூடிய தலைவர்களே உள்ளனர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இப்படி அடிக்கடி வெளிநாடு போய் வந்த பிரதமரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. குறிப்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விடாமல் வாரி வந்தார் மோடி.

உள்ளூரில் அதிக கவனம்
இந்தப் பஞ்சாயத்துக்கு இந்த ஆண்டு முற்றுப் புள்ளி வைக்கிறார் மோடி. இனி இந்தியாவில் அதிக கவனம் செலுத்த அவர் தீர்மானித்துள்ளார். இந்தியாவின் பல முக்கியப் பிரச்சினைகளில் இனி தனி கவனம் செலுத்துவாராம் மோடி.

2016ல் இந்த நாடுகளுக்கு போகிறார்
இதற்கிடையே, இந்த வருடத்தின் முல் சுற்றுப் பயணமாக ஜனவரி 15-16 ஆகிய நாட்கள் அவர் சவூதி செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது பிப்ரவரிக்குத் தள்ளிப் போயுள்ளதாம். அடுத்து மார்ச் மாத கடைசியில் பிரஸ்ஸல்ஸ் செல்கிறார். அதேபோல இந்த ஆண்டு மத்தியில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications