மோடிக்கு வெளிநாட்டு தலைவர்கள் அழைப்பு: நிரம்பி வழியும் இன்பாக்ஸ்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை தங்கள் நாட்டிற்கு வருமாறு வெளிநாட்டு தலைவர்கள் அழைப்பு விடுத்து அனுப்பும் இமெயில்களால், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இன்பாக்ஸ் நிரம்பி வழிவதாக அந்த அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடந்து முடிந்து நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது.

இதையடுத்து நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. அதில் 7 நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தங்களது நாடுகளுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தனர்.
நிரம்பி வழியும் இன்பாக்ஸ்
இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக இ-மெயில் முகவரிக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் தொடர்ந்து மோடிக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பி வருகின்றனர்.அவர்கள் மோடியை நேரில் சந்திக்க அதிக ஆர்வம் கொண்டு இந்த கடிதத்தை அனுப்பி வருகின்றனர். இதனால் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இமெயில் இன்பாக்ஸ் வெளிநாட்டு தலைவர்களின் அழைப்பு கடிதத்தால் நிரம்பி வழிவதாக அந்த அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜப்பான் போகும் பிரதமர்
இந்நிலையில், தற்போது நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு பயணமாக பூட்டானுக்கு செல்கிறார். இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூலை) ஜப்பான் செல்கிறார். அப்போது அந்நாட்டு அதிபரை சந்தித்து பேச உள்ளார்.
அமெரிக்கா வரவேற்பு
இதேபோல், அமெரிக்காவுக்கு வரும் செப்டம்பர் மாதம் செல்லவிருக்கும் மோடியை வரவேற்க காத்திருக்கிறோம் என அந்நாடு அறிவித்திருக்கிறது.
டாக்காவிற்கு போகும் சுஸ்மா
இந்தியவெளியுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள சுஷ்மா சுவராஜ் தனது முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசத்திற்கு இம் மாதம் 26ம் தேதி செல்ல உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 26-ம் தேதி பதவியேற்ற சுஷ்மா சுவராஜூக்கு தங்கள் நாட்டிற்கு வருகை தரும் படி வங்க தேச வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது அலி கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்தே அவர் வங்கதேசம் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சீன அமைச்சருடன் சந்திப்பு
இதனிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை வரும் ஞாயிற்றுக்கிழமை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்து பேச உள்ளார். சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் சிறப்பு தூதராக வரும் சீனவெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யீ சுஷ்மாவை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications