For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிர்க்கட்சிகளை மதித்து நடப்பதில் சிறந்தவர் மோடியே... ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து

Google Oneindia Tamil News

சென்னை: எதிர்க்கட்சிகளை மதித்து நடப்பதி்ல் சிறந்தவர் நரேந்திர மோடிதான் என்று ஒன்இந்தியா - தமிழ் வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளை மதித்து நடப்பது எப்படி என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கற்றுக் கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் கூறியிருந்தார்.

சரி இதை வைத்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேள்வி கேட்டிருந்தோம். அதில் மோடி, ஜெயலலிதா தவிர திமுக தலைவர் கருணாநிதியின் பெயரும் சேர்க்கப்பட்டு, எதிர்க்கட்சிகளை மதித்த நடப்பதில் சிறந்தவர் யார் என்று கேட்கப்பட்டிருந்தது.

அதன் முடிவு...

மோடிக்கு ஆதரவு

மோடிக்கு ஆதரவு

நரேந்திர மோடிதான் என்று கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 37.51 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மொத்தம் பதிவான வாக்குகள் 8638 ஆகும்.

கருணாநிதிக்கு 2வது இடம்

கருணாநிதிக்கு 2வது இடம்

இந்த கருத்துக் கணிப்பில் ஆரம்பத்தில் திமுக தலைவர் கருணாநிதிதான் முன்னிலையில் இருந்து வந்தார். பின்னர்தான் மோடி முந்தி விட்டார் சொற்ப வாக்குகளில். கருணாநிதிக்குக் கிடைத்துள்ள ஆதரவு 37.29 சதவீதம் ஆகும். அதாவது மிகச் சொற்பமான வாக்குகளில்தான் மோடி முந்தியுள்ளார். கருணாநிதிக்கு 8587 வாக்குகள் கிடைத்தன.

இவர்களில் யாருமே கிடையாது

இவர்களில் யாருமே கிடையாது

இவர்களில் யாருமே கிடையாது என்று கூறியுள்ளவர்களின் எண்ணிக்கை 19.85 சதவீதம் ஆகும். அதாவது 4572 வாக்குகள்.

ஜெயலலிதாவுக்கு 4வது இடமே

ஜெயலலிதாவுக்கு 4வது இடமே

இந்த வரிசையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4வது இடமே கிடைத்துள்ளது. அவருக்குக் கிடைத்துள்ள ஆதரவு 5.35 சதவீதம்தான். அதாவது 1233 வாக்குகள்.

மொத்தம் பதிவான வாக்குகள் எண்ணிக்கை 23,030 ஆகும்.

English summary
Oneindia Tamil readers have said in an opinion poll that PM Narendra Modi is best to respect opposition parties, than CM Jayalalitha and DMK president Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X