For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வுக்கு மோடி அஞ்சலி.. சசிகலா தலையைத் தொட்டு ஆறுதல்.. மோடியைக் கட்டிப்பிடித்து கதறிய ஓபிஎஸ்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.

Modi to pay tributes to Jaya

இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Modi to pay tributes to Jaya

ஜெயலலிதாவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு சென்னைக்கு கிளம்பினார்.

மோடி நண்பகல் 12 மணிக்கு சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து ராஜாஜி அரங்கம் வந்த மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சசிகலாவிடம் சென்று ஆறுதல் கூறினார். சசியின் தலையில் கை வைத்து ஆறுதல் கூறினார்.

அப்போது அங்கிருந்த முதல்வர் பன்னீர் செல்வம் மோடியை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

English summary
PM Modi has paid homage to Jayalalithaa who passed away last night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X