முருகன் கோவிலுக்கு வேல் வழங்கிய மோகன்லால்.. தென்காசி திருமலைக்கோவிலில் சாமி தரிசனம்.. பின்னணி
தென்காசி: ‛தொடரும்' படத்தின் வெற்றியை அடுத்து தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக்குமார சாமி கோவிலுக்கு இன்று வந்த மலையாள நடிகர் மோகன்லால் ‛வேல்' காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது.
தென்காசி மாவட்டம் பண்பொழியில் பிரசித்தி பெற்ற பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமலை குமாரசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மலையின் உச்சியில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவில் அமைந்துள்ள பகுதியில் இருந்து கேரளா என்பது மிகவும் பக்கத்தில் தான் உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி பக்கத்து மாநிலமான கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் தான் இன்று கோவிலுக்கு மலையாள நடிகர் மோகன்லால் திடீரென்று விசிட் செய்தார். கருப்பு நிற சட்டை, கருப்பு நிற பேண்ட் அணிந்து கையில்மோகன்லால் வந்தார். கோவிலுக்கு ‛வேல்' உபயம் செய்தார். அதன்பிறகு கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மோகன்லாலுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.
மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‛தொடரும்' திரைப்படம் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ‛திருமலை முருகனுக்கு அரோகரா' என்பது பயன்படுத்தப்பட்டு இருக்கும். 'கொண்டாட்டம்' பாடலில் ஒரு முக்கிய வரியாக ‛திருமலை முருகனுக்கு அரோகரா' என்ற வரி இடம் பெற்றுள்ளது.
திருமலைக்குமார சாமி கோவிலில் உள்ள முருகனை குறிக்கும் வகையில் இந்த அரோகரா கோஷம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்த திரைப்படம், அந்த வரி இடம்பெற்ற பாடல் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியையொட்டி மோகன்லால் கோவிலுக்கு வந்து வேல் வழங்கி சாமி தரிசனம் செய்துள்ளார்.
தற்போது வெற்றியடைந்துள்ள ‛தொடரும்' திரைப்படம் மோகன்லாலின் 360வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் மோகன்லால் நடிகை ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் 2 பேரும் கடைசியாக 2004ல் ‛மாம்பழக்காலம்' என்ற படத்தில் நடித்திருந்தனர். தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் ‛கிரைம் த்ரில்லராக’ உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications