வேலூர் சிறையில் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி முருகனிடம் பணம் பறிமுதல்!

Subscribe to Oneindia Tamil

Money confiscated from Murugan in Vellore…
வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியான முருகனிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்கு உள்ளான முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய 3 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் சிறை காவலாளிகள் வழக்கமான கண்காணிப்பு சுற்றில் ஈடுபட்ட போது முருகனின் கையில் ஒரு நோட்டுபுத்தகம் இருந்ததை அடுத்து வார்டன்கள் சந்தேகம் அடைந்தனர்.

அதையடுத்து அவரது கையில் இருந்த நோட்டினை வாங்கி சோதனைச் செய்து பார்த்தபோது அதில் 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதனை பறிமுதல் செய்த சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன் இப்பணவிவகாரம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+