காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல்- திருச்சி பறக்கும் படையினர் அதிரடி
ஸ்ரீரங்கம்: திருச்சியில் காரில் கொண்டு செல்லப்பட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 2 கோடியே 80 லட்சத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதினைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஆவணங்கள் இல்லாமல் பெருந்தொகைகளை வாகனங்களில் எடுத்துச் செல்லக் கூடாது என்று அறிவுருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதியில் உள்ள கும்பகோணத்தான் சாலையில் சென்ற காரில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூபாய் 2,80,5000 ரொக்கப்பணம் சிக்கியது.

பணத்தை பறிமுதல் செய்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் பவானி விசாரணை செய்து வருகிறார். முதல் கட்ட விசாரணையில் ஏ.டி.எம் மையங்களில் பொருத்த பணம் எடுத்து வந்தாக காரில் வந்தவர்கள் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications